
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஐயப்பன்-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் அனுஷ்கா இந்த சிறுமிக்கு 12 வயது ஆகிறது. அனுஷ்கா இன்று மின் மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அனுஷ்கா வலியில் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அனுஷ்காவை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அனுஷ்காவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.