‌ உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோதியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கோவில் சுமார் ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு பெய்த மழையினால் கோவில் கருவறையில் தண்ணீர் ஒழுகுவதாக தலைமை பூசாரி ஆச்சாரியா சத்யேந்திரா தெரிவித்துள்ளார். கோவிலில் பூசாரிகள் அமர்ந்து தியானம் செய்யும் இடத்தில் நீர் ஒழுகுவதால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கருவறை உள்ளே பிரதான மேற்கூரை ஒழுகுவது ‌ பூசாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மழை நீர் வடியும் வண்ணம் முறையாக பாதாள சாக்கடை கட்டப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்த தற்போது அயோதி ராமர் கோவிலுக்கு செல்லும் 14 கிலோமீட்டர் நீளமுடைய சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கோவில் கட்டுமான பணிகள் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது கட்டுமானத்தில் பிரச்சனைகள் இருப்பதாக வந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு எதிர்க்கட்சிகள் பாஜகவை சரமாரியாக விளாசி வருகிறது. இந்நிலையில் தற்போது உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இருப்பினும் பாஜக செய்துள்ள மிகப்பெரிய ஊழலைத்தான் கோவில் கட்டுமான பணிகள் காட்டுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.