இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இது போன்ற வீடியோக்களில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதுபோன்ற வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் புழுவைப் பிடித்து சாப்பிட தெரியாமல் தவிக்கும் ஒரு பறவை குஞ்சின் வீடியோ தான் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

குஞ்சாக இருக்கும் தாய் பறவை உணவைக் கொண்டு வந்து ஊட்டி விடும். அதற்கு வாயை திறந்தால் மட்டும் போதும். அப்படி வளர்ந்து ஒரு பறவை குஞ்சுக்கு பாவம் புழுவை பிடிக்க வேண்டும் என்று தெரியாமல் வாயை திறந்தபடி அதன் பின்னரே ஓடுகிறது. புழுவுக்கு பிடித்த நல்ல நேரம் என தான் கூற வேண்டும். தான் பசியாற அதனை பிடித்து சாப்பிட வேண்டும் என்று தெரியாததால் தவிக்கும் பறவை குஞ்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.