உடல் நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிற்கு இருதய சிகிச்சை செய்யப்பட்டது. அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில் இதனை கருதி தற்காலிகமாக அவர் அரசியலில் இருந்து விலகுவதாகவும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.