அஜித் விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் திரிஷா. இளைஞர்களின் பேவரைட் கதாநாயகியாக இருக்கும் த்ரிஷா சமீபத்தில் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இதனிடையே திரிஷா சினிமாவை விட்டு விலகி அரசியலில் களமிறங்கப் போவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதற்கு த்ரிஷாவின் அம்மா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் “திரிஷா அரசியலுக்கு வர மாட்டார். அவர் சினிமாவில் தான் தொடர்ந்து நடிப்பார். சமூக வலைதளங்களில் இது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை” என கூறியுள்ளார்.