
2024 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக கிரிக்கெட் அர்ப்பணிப்புகளில் கவனம் செலுத்துவதற்காக, அரசியல் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கவுதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு மாண்புமிகு கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்துளேன், இதனால் எனது வரவிருக்கும் கிரிக்கெட் கடமைகளில் கவனம் செலுத்த முடியும். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. ஜெய் ஹிந்த்!” என தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸின் (கேகேஆர்) வழிகாட்டியாக தனது பதவிக்காலத்தை தொடங்குவதால், தனது அரசியல் கடமைகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தலைவர் நாட்டைவிடம் கெளதம் கம்பீர் கேட்டுக் கொண்டார்.
டெல்லியில் உள்ள 7 எம்.பி.க்களில் சிலருக்குப் பதிலாக பாஜக புதிய முகங்களை வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு மாற்றப் போகிறது என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த செய்தியை கம்பீர் தெரிவித்துள்ளார். 2019 லோக்சபா தேர்தலில், வடமேற்கு மற்றும் கிழக்கில் உள்ள 2 டெல்லி எம்.பி.க்களை பாஜக மாற்றியது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் சேர்ந்தார், பின்னர் டெல்லியில் கட்சிக்குள் ஒரு முக்கிய நபராக உருவெடுத்தார். மேலும் கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் இருந்து அவர் 55 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரும் காங்கிரஸ் வேட்பாளருமான அரவிந்தர் சிங் லவ்லியை தோற்கடித்தார். 2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் அவர் வெற்றிகரமாகப் போட்டியிட்டு, 6,95,109 வாக்குகள் வித்தியாசத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார். இருப்பினும், கம்பீர் அரசியலில் இருந்து விலகுகிறாரா என்பது தெரியவில்லை.
I have requested Hon’ble Party President @JPNadda ji to relieve me of my political duties so that I can focus on my upcoming cricket commitments. I sincerely thank Hon’ble PM @narendramodi ji and Hon’ble HM @AmitShah ji for giving me the opportunity to serve the people. Jai Hind!
— Gautam Gambhir (Modi Ka Parivar) (@GautamGambhir) March 2, 2024