பிரபல தொழிலதிபர் லாட்டரி கிங் மார்ட்டின். இவர் திமுக மற்றும் பாஜக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குகிறார். இவருடைய மகள் டெய்ஸி. இவர் ஆதவ் அர்ஜுனாவை திருமணம் செய்துள்ளார். இதில் ஆதவ் முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த நிலையில் பின்னர் அதிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக விஜய் வெற்றி பெறுவார் என்று ஆதவ் கூறி வருகிறார். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா அரசியல் செயல்பாடுகளுக்கும் குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் கிடையாது எனவும் பர்சனல் வேறு ப்ரொபஷனல் வேறு எனவும் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் எனவும் வலியுறுத்தி அவருடைய மனைவி டெய்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஆதவ் அர்ஜுனாவும் நானும் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழிலையும் தனித்தனியாகவே பார்க்க விரும்புகிறோம். அரசியல் சார்ந்து ஆதவ் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அவர் சிந்தித்து எடுக்கும் முடிவுகள். அதற்கும் குடும்பத்தினருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எங்கள் இருவருக்கும் தனித்தனியான பார்வை இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் சிக்கலை உண்டாக்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் ஆதவ் இணைந்த பிறகு அவருடைய மனைவி திடீரென இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டது பரபரப்பாக பேசப்படுகிறது.