புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்பு நேரமானது மாற்றியமைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி காலை முதல் மதியம் வரை நான்கு வகுப்புகள், மேலும்  மதியம் முதல் மாலை வரை நான் வகுப்புகள் என நாள் ஒன்றுக்கு எட்டு வகுப்புகள் நடைபெற இருக்கிறது .

வகுப்புகள் அதிகரிக்கப் பட்டதால் பள்ளியின் தொடக்க நேரம் மற்றும் முடிவடையும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகுப்பு நேரம் ஆனது இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக  தெரிவித்துள்ளனர்.