
தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவிகளுக்கு கல்வி மேம்பாட்டு உதவி தொகை வழங்கப்படுகிறது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 500, ஆறாம் வகுப்பிற்கு ஆயிரம், ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு வரை 1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை பெற விண்ணப்பமானது 2023 ஆம் வருடம் விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் உதவி தொகை வழங்கப்படவில்லை.
பள்ளிகள் எமிஸ் தளத்தில் மாணவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்யாத காரணத்தால் இந்த ஆண்டு இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாக புகார் அளித்துள்ளது. உரிய வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருப்பதால் பல மாவட்டங்களில் இன்னும் மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.