
தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை மாத கடைசி நாளில் வழங்குவது வழ க்கம். அதன்படி மாத இறுதி நாளான 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வங்கி கணக்குகளில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்தப்படும். அதே நேரத்தில் கடைசி நாள் விடுமுறை நாளாக இருந்தால் சம்பளம் அதற்கு முந்தைய நாள் அல்லது விடுமுறை முடிந்த பிறகு செலுத்தப்படும்.
இந்நிலையில் நடப்பு மார்ச் மாதத்தில் வருடாந்திர கணக்குகள் முடிக்கப்பட இருப்பதால் இந்த மாத இறுதியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்தப்பட மாட்டாது என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மாதம் முடிந்து 2 நாட்கள் கழித்து தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்தப்படும். மேலும் அதன்படி ஏப்ரல் 2-ம் தேதி அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.