மத்திய அரசு ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக் கான விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 2025-ல் மொத்தம் 14 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் பேர் மத்திய அரசு பணியில் இருக்கும் நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் அவர்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணியாற்றுகிறார்கள்.

இந்நிலையில் தற்போது விடுமுறைகள் குறித்து பார்ப்போம். அதன்படி குடியரசு தின விழா, சுதந்திர தின விழா, காந்தி ஜெயந்தி, புத்த பூர்ணிமா, கிறிஸ்துமஸ், விஜயதசமி, தீபாவளி பண்டிகை, புனித வெள்ளி, குருநானக் பிறந்த நாள், பக்ரீத், ரம்ஜான், மகாவீர் ஜெயந்தி, மொகரம் மற்றும் முகமது நபி பிறந்தநாள் போன்றவைகள் கட்டாய விடுமுறை தினங்களாகும். மேலும் இதுபோக 12 விருப்ப விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.