
அரசு ஊழியர்களின் குழந்தை பராமரிப்பு விடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த அறிக்கையில், பெண்கள் மற்றும் ஒற்றை ஆண் அரசு ஊழியர்களுக்கு 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறைக்கு உரிமை உண்டு.
முதல் இரண்டு குழந்தைகளை அவர்கள் 18 வயதை அடையும் வரை கவனித்துக் கொள்வதற்காக முழு சேவையிலும் அதிகபட்சமாக 730 நாட்கள் விடுமுறை எடுக்கலாம், மேலும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு வயது வரம்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.