
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி அண்மையில் அகலவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது அகல விலைப்படி 42 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் அகல விலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் எட்டாவது ஊதிய குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் இந்த கோரிக்கையின் படி எட்டாவது ஊதிய குழு அமலுக்கு வந்தால் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் வெகுவாக உயரக்கூடும். தற்போது அடிப்படை ஊதியம் 18000 ரூபாய் உள்ள நிலையில் இதே 26 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும். எனவே ஊழியர்கள் எட்டாவது ஊதிய குழுவை அமைக்க வலியுறுத்தி வருகிறார்கள். 2024 ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக எட்டாவது ஊதிய குழு அமைக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.