
தமிழக சட்டசபை கூட்ட தொடர் இன்று தொடங்கிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதன் பிறகு அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் 10,000 ரூபாயிலிருந்து 20000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதன்பிறகு அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணமும் 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.