திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அரசு கலை அறிவியல் மகளிர் கல்லூரி உள்ளது. இங்குள்ள மகளிர் விடுதியில் தங்கியுள்ள விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு அங்குள்ள கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிபு செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அங்குள்ள கல்லூரி நூலகம் எந்தவிதமான முறையான பராமரிப்புகளும் இன்றி விடுதியாக இவர் தனக்கு அரசியல் பிரபலங்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.