தமிழக அரசு தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு துறை தேர்வில் இருந்து விலக்கு அளித்து புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு பணிகளில் பணியாற்றும் 50 வயதை கிடந்த மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு மீண்டும் துறை தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளை 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற பணிப்பதிவேட்டில் விவரம் இருக்க வேண்டும் அல்லது நுழைவுச்சீட்டு வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு துறை தேர்வில் இருந்து விலக்கு வழங்கப்பட்டு புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.