நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கவின்ராஜ் என்ற சிறுவன் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் பள்ளிக்கு சென்ற நிலையில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்பில் இருந்து சென்றான். ஆனால் நீண்ட நேரம்  ஆகியும் வகுப்புக்கு திரும்பாததால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவின்ராஜை தேடி சென்றனர். அங்கு கவின் ராஜ்  மயக்கம் அடைந்த நிலையில் கிடந்துள்ளான். இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே மாணவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாணவன் இறந்ததற்கான காரணம் குறித்து கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.