
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு பள்ளி மேலாண்மை குழுவுக்கு (SMC) புதிதாக தேர்வானவர்களின் விவரங்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி உறுப்பினர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை பெற்று அவற்றை எமிஸ் தளத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.