
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற ஒரு லட்சம் மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 6695 பேருக்கு மத்திய அரசு உதவி தொகை வழங்குகிறது.
இதற்காக 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வருகிற 22-ஆம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. எனவே மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து தேர்வில் பங்கேற்கலாம்.