கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று கோவையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பேருந்து புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஓட்டுனர் கீழே இறங்கி பேருந்தில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஒரு பயணி இங்கு நிறைய கழிவறைகள் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நீங்களே இப்படி பேருந்தின் மீது சிறுநீர் கழிக்கலாமா என கேள்வி எழுப்பினார். அதற்கு ஓட்டுனர் அவசரம் என பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது