கேரளாவில் அனைத்து அரசு பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி முழுமை அடையாமல் உள்ளது. இதனால் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் உட்பட போக்குவரத்து பேருந்துகள் அனைத்திலும் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு பேருந்தில் முன் மற்றும் பின் பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அவ்வாறு பொருத்துவதால் பேருந்தின் உள்ளே மற்றும் வெளியே போக்குவரத்து விதிமுறைகளை எளிதாகவும் விரைவிலும் கண்டறிய முடியும். மேலும் மாநிலத்தில் இயக்கப்படும் கே எஸ் ஆர் டி சி உட்பட ஆயிரக்கணக்கான பேருந்துகளுக்கு கேமராக்கள் வாங்குவதற்கு நேரம் எடுத்துக் கொள்வதால் இந்த முயற்சியை செயல்படுத்துவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.