மாமல்லபுரம் அடுத்த மனமை கிழக்கு கடற்கரை சாலையில், புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 2 பெண் குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் ஓட்டுநர் என 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.