
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து இரவு நேரத்தில் மிடாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுபாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஜஸ்டின் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் மடவிளாகம் பகுதியில் சென்ற போது நடந்து சென்ற 2 பேர் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது.
இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அரசு பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்திய கார்த்திக் என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்றொரு வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.