சேலத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு பிரசவத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தையை நேற்று ஒரு பெண் கடத்தி சென்றார். அந்தப் பெண் மாஸ்க் அணிந்திருந்தார். இவர் செவிலியர் என்று கூறி அங்கு சென்று குழந்தையை நைசாக கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் தீவிரமாக ‌ விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது அந்த பெண்ணை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அதாவது குழந்தை உடல் நலம் சரியில்லாததால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போதுதான் அவர் வசமாக சிக்கினார்.‌ அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஆண் குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரின் பெயர் வினோதினி என்பது தெரியவந்தது. அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்நிலையில் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகிடும் குழந்தை இல்லாததால் வினோதினி குழந்தையை கடத்தி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.