
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை இந்த மாதம் இறுதியில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்று ஒவ்வொரு துறையினரும் அவர்களின் எதிர்பார்ப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மிடில் கிளாஸ் மக்களுக்கு வருமான வரியில் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தற்போது மிடில் கிளாஸ் மக்கள் மிகவும் கோபமாகவும் அதிர்த்தியுடனும் உள்ளதாக அவர் பிரதமர் மோடிக்கு ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். மக்கள் கோபமாக இருக்க காரணம் அவர்கள் மீது இருக்கக்கூடிய அதிகபட்ச வரி சுமை தான். வரி அதிகமாக இருப்பது ஒரு புறம் இருந்தாலும் மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இந்தியாவின் மிடில் கிளாஸ் மக்கள் சந்தித்து வருகிறார்கள்.
வருமான வரி விதிப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அதனைப் போல பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும் வரி விகிதத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். பல துறை சார்ந்த நிபுணர்களும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ள நிலையில் இந்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.