
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி/ ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சிலைகளை வாங்கி வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்நிலையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக அரசு இன்று விடுமுறை அறிவித்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
விடுமுறை தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு, மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதனால் வழக்கம்போல், வங்கிகள், போஸ்ட் ஆபீஸ் உட்பட மத்திய அரசின் கீழ் செயல்படும் அனைத்து அலுவலகங்களும் இயங்கும். நாளை மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்