
எஸ் பி அருண் குமார் அவர்களுடன் ஆன மோதல் குறித்து நேர்காணல் ஒன்றில் சீமான் இவ்வாறு தெரிவித்தார். அதில், எத்தனையோ ஐபிஎஸ் அதகாரிகள் இருக்கிறார்கள் எத்தனையோ காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்களோடு நட்புடன் தான் நாங்கள் பழகுகிறோம்.
எஸ் பி வருண்குமார் உடன் மட்டும் மோதல் ஏற்படுகிறது என்றால் அது அவர் நடந்து கொண்டதில் இருந்து வந்தது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தூக்கிக் கொண்டு வந்து அடிப்பீர்கள், குண்டாசு போடுவீர்கள் என்றால் ஒரு கட்சி நடத்தக் கூடிய நபராக அதை நான் எப்படி பார்ப்பது? நீங்கள் நேர்மையாக முறையாக நடந்து கொண்டால் எங்களுக்கு பிரச்சனை இல்லை.
நீங்கள் வைக்கக்கூடிய குற்றச்சாட்டு கற்பனையில் உள்ளது. உங்களை எதிர்க்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. எந்த அரசுக்கு ஆதரவாக வேலை செய்கிறார்களோ அந்த அரசை எதிர்த்து சண்டை போடுபவன் நான். அதில் நீங்கள் எந்த ஓரத்தில் இருக்கீங்க. நீங்க அதுல ஒரு புள்ளி கூட கிடையாது. கமா கூட கிடையாது. அப்புறம் ஏன் நான் உங்களை எதிர்க்கணும். உங்களால் என்ன முடியுமோ செய்து கொள்ளுங்கள். என்று தெரிவித்துள்ளார்.