
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தெற்கு கேரள கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.