
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில் அதனைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். மேலும் மயிலாடுதுறையில் உலா வந்த சிறுத்தை தான் இதுவா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலையில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்ற நிலையில் அவர்களின் பாதுகாப்பு கருதி இன்று மதியத்துடன் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி எடுத்து வருகிறார்கள். 24 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.