கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் ராகேஷ் பாபு-தன்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தக்ஷினா (13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி பள்ளியில் படித்து வந்த நிலையில் திடீரென வாந்தி மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார். அவருடைய இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு நடத்தி வந்தனர். அப்போது அரிய வகை அமீபிக் நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அதாவது சிறுமியின் முதுகுத்தண்டை சோதித்ததில் இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் இருந்து சிறுமி மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ஒரு குளத்தில் குளித்ததால் இந்த அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.