மத்திய பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை அறிய வகை நோயில் இருந்து காப்பாற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்கனி என்ற பெண் கணவரின் பணி நிமிர்த்தம் காரணமாக கேரள மாநிலத்திற்கு குடி பெயர்ந்தார். மூன்றாவது முறையாக கருவுற்ற இவருக்கு கடந்த  29-ம் தேதி வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே வலிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த 7-ம் தேதி இரண்டு கை மற்றும் கால்கள் செயலிழந்தது. இதனை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பெண் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு அரிய வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அரசு மருத்துவமனை மருத்துவரின் தீவிர முயற்சியால் இவர் காப்பாற்றப்பட்டுள்ளார். கை, கால்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.