
அட்லாண்டிக் கடலின் தெற்கு பகுதியில் போக்லாந்து தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவு கூட்டத்தில் கிட்டத்தட்ட 3800 மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த தீவு கூட்டத்தை இங்கிலாந்து அரசு நிர்வகித்து வருகிறது. இங்கு டூத்பிஷ் என்ற அரிய வகை மீன் காணப்படுகிறது. இதனை அறிந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மீனை தேடி கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.
இதற்காக 30 ஆராய்ச்சியாளர்கள் அந்த தீவுக்கு மீன்பிடி படகில் சென்றனர். அவர்கள் 200 மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது மோசமான வானிலை ஏற்பட்டது. இதனால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 22 பேர் கடலில் மாயமாகினர். இந்த தகவலை அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று 8பேரின் உடலையும் மீட்டனர். மேலும் மாயமான 22 பேரை தேடி வருகிறார்கள்.