அபுதாபியில் இம்ரான் கான் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியர். இவருக்கு ஷைமா என்ற மகள் இருந்துள்ளார். இந்த குழந்தைக்கு பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் 3 எனும் அரியவகை நோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்த நோய் கல்லீரலை தாக்கும் குணம் கொண்டது. இந்த நோய் பாதிப்பினால் கடந்த 2019 ஆம் ஆண்டு குழந்தை ஷைமா 4 வயதில் உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு அவருக்கு ரசியா என்ற மகள் பிறந்தார். இந்த குழந்தைக்கு தற்போது 4 வயது ஆகும் நிலையில் அதே அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். இந்த குழந்தை ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ செலவுக்கு இந்திய மதிப்பில் ரூ.2 கோடியே 30 லட்சம் செலவாகும் எனக் கூறப்பட்டது.

இந்த தொகையை திரட்ட சாதாரண ஊழியரான அவருக்கு மிகவும் கடினமாக இருந்ததால் அவர் அந்நாட்டின் தொண்டு நிறுவனமான செம்பிரை சங்கத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டார். அதன் பிறகு அந்த தனியார் மருத்துவமனை இலவச உறுப்புமாற்ற அறுவை சிகிச்சை செய்வதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து தன்னுடைய மகளுக்காக அவர் கல்லீரல் தானம் செய்ய முன் வந்தார். அதாவது சிறுமிக்கு கல்லீரல் கிடைக்காததால் அவருடைய தந்தையே கொடுக்க முன்வந்ததார். இதைத்தொடர்ந்து 12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு இம்ரான் கானின் கல்லீரலில் இருந்து சிறு பகுதி எடுக்கப்பட்டு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. அதன் பிறகு குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற மருத்துவர் கூறினார்கள். மேலும் தன்னுடைய மகள் உயிர் பிழைத்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக இம்ரான் கான் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.