
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக படக்குழு தனி விமானத்தில் சென்றனர்.

அவர்கள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விஜய் மற்றும் திரிஷா சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அருமையான ஜோடி. எங்களை தேர்ந்தெடுத்த திரிஷா மற்றும் விஜய் சார் ஆகியோருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். அதோடு உங்கள் பயணத்தில் நாங்களும் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் பதிவிட்டுள்ளனர். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
The perfect 'Theri'fic combination! Thank you, @trishtrashers and @actorvijay sir for choosing us. We're thrilled to be a part of your journey!#flyspicejet #spicejet #thalapthy67 #trishakrishnan #actorvijay #celebrityonboard #travel #flight #addspicetoyourtravel pic.twitter.com/olGp3J4PH5
— SpiceJet (@flyspicejet) February 26, 2023