மதுப்பிரியர் ரகளை செய்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை செல்லும் வழியில் சாமுண்டி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் மதுபிரியர் ரகளையில் ஈடுபட்டார். இந்நிலையில் அந்த நபர் போக்குவரத்து காவலர்கள் நிற்கும் குடையின் கீழ் உட்கார்ந்து அட்டகாசம் செய்தார். இப்பகுதியில் இரண்டு மதுபான பார்கள் செயல்பட்டு வருவதால் மது பிரியர்களின் அட்டூழியம் அதிகரித்து வருவதாகவும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையின் நடுவே அங்கும் இங்கும் அலைந்து ரகளை செய்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.