
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சிஎஸ்கே அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை அதிக முறை வீழ்த்தியது. அதே சமயம் மும்பை அணி பெரும்பாலும் ஐபிஎல் தொடரின் தன்னுடைய முதல் போட்டியில் வென்றது கிடையாது என்ற சாதனையையும் வைத்துள்ளது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் செய்து இருவது ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா உட்பட முன்னணி வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தார்கள்.
கடைசி நேரத்தில் தீபக் சகர் மட்டுமே 28 ரன்கள் அடித்து அணியை காப்பாற்றினார் . இதில் தன்னுடைய முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் எடுத்துள்ளார் மும்பை வீரர் விக்னேஷ் புத்தூர். 24 வயதான இவர் u 14, U 19 போட்டிகளில் மட்டுமே கேரளா அணிக்காக விளையாடி உள்ளார் . இவருடைய திறமை கண்ட மும்பை அணி நிர்வாகம் SA 20 லீக்கில் மும்பை கேப்டன் அணியின் நெட்பௌலராக சேர்த்தது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 30 லட்சத்திற்கு எடுக்கப்பட்ட இவர் நேற்று ருத்ராஜ், துபே, தீபக் ஹூடா ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். 4 ஓவர்கள் வீசிய நிலையில் 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த இவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.