கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில் ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த சரவணன்(32) என்பவர் விவேகானந்தபுரம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது உதயகுமார்(53) என்பவர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி சரவணனை கன்னியாகுமரி ரயில் நிலையம் பகுதியில் இருக்கும் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த அறையில் அரைகுறை ஆடையுடன் 40 வயது மதிக்கத்தக்க பெண் இருந்தார்.

இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த சரவணன் அங்கிருந்து அமைதியாக கிளம்பி விட்டு நடந்த சம்பவத்தை கூறி கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியில் ஆய்வு செய்து அந்த பெண்ணை மீட்டு நாகர்கோவிலில் இருக்கும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் விபச்சார புரோக்கர்களான உதயகுமார், அவருக்கு உடந்தையாக இருந்த விடுதி மேலாளர் சிந்தியா ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.