உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் முடிந்த நிலையில் இவர் தன்னுடைய கணவர், மைத்துனர், மாமியார் ஆகியோரோடு புகுந்த வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார் . இந்த நிலையில் அங்கே அந்த குடும்பம் தன்னை வன்முறைக்கு ஆளாக்குவதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். புகுந்து வீட்டிற்கு சென்ற சில நாட்களிலேயே அவருக்கு விசித்திரமான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதாவது மாமியார் தன்னை தன்பால் உறவுக்கு வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததில் பிளேடு கொண்டு தாக்கியதோடு பிரச்சனையை திசை திருப்ப கணவன் மனைவியிடையே பிரச்சனையை மூட்டிவிட்டதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மருமகளை பிளேடு கொண்டு மாமியார் தாக்கியதில் கைகளில் ஐந்து இடங்களில் ஆழமான காயங்களுக்கு தையல் போடப்பட்டதை பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் கணவர், மைத்துனர் என வீட்டின் இரண்டு ஆண்களை ஏவி விட்டு மாமியார் தன் மீது தொடர்ந்து சித்திரவதைகளை செய்து வருவதாக கூறினார்.

மேலும் மாற்று ஆடை கூட கூட வழங்காமல் தனி அறையில் அடைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் புகுந்த வீட்டால் வரதட்சணை நெருக்கடி மற்றும் உடல்நிலை ரீதியான துருஷபிரயோகத்துக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெண் போலீசில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.