ஓ மை கடவுளே படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. தற்போது டிராகன் படத்தால் இவருடைய புகழ் உச்சிக்கு சென்றது. இந்த படம் வணிக ரீதியாக 100 கோடிக்கு மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் அஸ்வத்தை நடிகர் ரஜினிகாந்த் அவருடைய வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினியை  சந்தித்தது குறித்து டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்,” நல்ல படம் எடுக்க வேண்டும். படத்தை பார்த்துவிட்டு ரஜினி சார் வீட்டுக்கு அழைத்து பாராட்டி நம் படத்தைப் பற்றி பேச வேண்டும் என்பது இயக்குனராக வேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைக்கும் ஒவ்வொரு இயக்குனர்களின் கனவு. என்னுடைய கனவு நிறைவேறிய நாள் இன்று” என்று பதிவிட்டுள்ளார்.