தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு ‌7 மணி வரை தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் திருநெல்வேலி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.