
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழை படிப்படியாக தீவிரமடைய தொடங்கி வருகிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதன் பிறகு இன்று தமிழகத்தில், பெரம்பலூர், திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் அதாவது அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.