
தமிழகத்தில் வடகிழக்கு பருவமறை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.