
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் நிலையில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பல்வேறு இடங்களில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு இன்று தமிழகத்தில் மட்டும் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதாவது திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று நாளை மற்றும் நாளை மறுநாளும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வருகிற அக்டோபர் 15ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. மேலும் புயல் வலுப்பெற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.