
திருவள்ளூர் மாவட்டம் நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு பாரதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த கிருஷ்ணமூர்த்தியை அவரது தாய் ஜெயந்தி கண்டித்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி கிருஷ்ணமூர்த்தி தனது தாய் ஜெயந்தியிடம் தொழில் தொடங்க பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது ஜெயந்தி பணம் தர முடியாது என கூறியதால் கோபத்தில் கிருஷ்ணமூர்த்தி தனது தாயை மிரட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஜெயந்தி வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்ததோடு, வீட்டிலேயே இருந்து கொண்டு என்னையும் மிரட்டுகிறாயா என கூறி கிருஷ்ணமூர்த்தி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதனால் கிருஷ்ணமூர்த்தி வலியில் அலறி துடித்தார். அவரதுசத்தம் கேட்டு ஓடி வந்த பாரதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது கணவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயந்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.