கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என பல்வேறு இளம்பெண்கள் மகளிர் விடுதியில் தங்கி உள்ளனர். அந்த விடுதியின் முன்பு வாலிபர் ஒருவர் நிர்வாணமாக நின்று ஆபாச நடனமாடினார்.

அதனைப் பார்த்த பெண்கள் கத்தி கூச்சலிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆபாசமாக நடனமாடிய நபர் திருவனந்தபுரம் ஒற்றசேகரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்(35)என்பது தெரியவந்தது.

அவர் குடித்துவிட்டு மது போதையில் நிர்வாணமாக நடனம் ஆடியுள்ளார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.