மதுரை மாவட்டம் உலகனேரி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் அபினேஷ். இவர் ஆட்டோ ஓட்டுனர். நேற்று இரவு அபினேஷ் ஆட்டோவில் தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த மர்ம நபர்கள் அபினேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் அருகில் இருந்த ஓட்டை எடுத்து அபினேஷின் தலையில் ஓங்கி அடித்தனர். இதனால் காயமடைந்த அபினேஷ் அலறி சத்தம் போட்டார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் கத்தியால் அபினேஷின் முகத்தில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபினேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முன் விரோதம் காரணமாக அபினேஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.