
மதுரை மாவட்டம் மாநகர் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி சம்பவ நாளில் வீட்டில் இருந்து கடைக்கு சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சிறுமியை பெற்றோர் தேடிச் சென்ற நிலையில் அந்த சிறுமி அழுது கொண்டே ஓடி வந்தார். இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுமியிடம் கேட்க அவர் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த மாணவியுடன் பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் உட்பட ஆறு சிறுவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. மேலும் இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்