கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளை புத்தன் வீடு பகுதியில் பிரேம குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் இறந்துவிட்ட நிலையில் அஸ்வதி (22) என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் முடித்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும் போது ராஜேஷ் என்ற வாலிபரை காதலித்துள்ளார். இந்த காதல் விவகாரம் பிரேம குமாரிக்கு தெரிய வந்த நிலையில் காதலை கைவிடுமாறு தன் மகளிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அஸ்வதி மறுப்பு தெரிவித்த நிலையில் தன் மகளுக்கு வேறு திருமணம் செய்து வைக்க பிரேமகுமாரி ஏற்பாடு செய்துள்ளார். இதனால் அஸ்வதி மற்றும் ராஜேஷ் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்னர் எதுவும் நடக்காதது போல் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். அதாவது அலைபாயுதே படத்தில் திருமணம் முடிந்த பிறகு எதுவும் நடக்காதது போன்று அவரவர் வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

அதேபோன்று சினிமா பாணியில் அவர்கள் நடந்துள்ளனர். இந்நிலையில் அஸ்வதியின் திருமணம் அவருடைய தாயாருக்கு தெரிய வந்த நிலையில் தன் மகளை வீட்டில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்து துன்புறுத்தியுள்ளார். அவருக்கு நேரத்திற்கு சாப்பாடு மட்டும் கொடுத்த நிலையில் ஒரு கட்டத்தில் தன் தாயின் கொடுமையை பொறுக்க முடியாமல் அஸ்வதி வீட்டில் இருந்து தப்பித்து காதல் கணவருடன்  காவல் நிலையத்தில் ‌ தஞ்சமடைந்தார். இது பிரேம குமாரிக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தன் மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டார். அதோடு காவல்துறையினர் முன்னிலையில் அஸ்வதியை கீழே தள்ளி அடித்தார். அவரிடமிருந்து அவர்கள் அஸ்வதியை மீட்டனர். மேலும் அஸ்வதி தன் காதல் கணவருடன் செல்ல வேண்டும் என்று கூறியதால் அவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் சோகத்துடன் பிரேம குமாரி அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.