
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகும் ஏதேனும் ஒரு சம்பவத்தின் காணொளி வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறுவது வழக்கம். அவ்வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த காணொளியில் சிலர் கடல் அலை வரும் பக்கம் அமர்ந்துள்ளனர். ஒரு அலை வந்து அவர்களை நனைத்து செல்ல அந்த அலை செல்லும் போது இரண்டு பெண்களை இழுத்து செல்கிறது. அலை இழுத்து செல்லும்போது இருவரும் ஒரு துளி கூட தப்பிப்பதற்கு முயற்சிக்கவில்லை.
இதுதான் நெட்டிசன்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. பின்னர் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு கரையில் இருந்த சிலர் சென்று அவ்விருவரையும் பிடித்து காப்பாற்றி உள்ளனர். இந்த காணொளியை பார்த்த நெடிசன்கள் பலரும் உயிர் பிழைக்கும் திறன் அவர்களிடம் சிறிதும் இல்லை என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DBp1aEaJvUu/?igsh=Yzl1bXVpN2l6NGlq