தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, கோவை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.